குளிர்கால வருகையையொட்டி சுவிஸ் சூரிச் நகரில் இருந்து விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
குளிர்கால வருகையையொட்டி சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து புதிய விமானம் ஒன்று நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
எடெல்வீஸ் எயார்லைன்ஸ் எயார்பஸ் ஏ 330 வகை விமானமே இலங்கையை வந்தடைந்தது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.
நேற்று காலை 09.20 மணியளவில் எடெல்வீஸ் எயார் லைன்ஸின் டபிள்யூ.கே.-68 என்ற இந்த விமானத்தில் 17 வணிக வகுப்பு பயணிகளும் 221 பொருளாதார வகுப்பு பயணிகளும் இதர 13 பணியாளர்களும் என 251 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும சூரிச்சில் இருந்து புறப்பட்டு, நேரடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்த விமானம், அன்றைய தினம் முற்பகல் 10.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு மாலைதீவு வழியாக சூரிச்சுக்குத் திரும்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் 2025 ஜனவரி முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிச்சிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர்கால விமான சேவையின் விமானங்கள் 2025 மே மாதம் வரை இயக்கப்படும்.