பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சாதகமான பதில்களை உறுப்பு நாடுகள் வழங்கியுள்ளன.
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சாதகமான பதில்களை உறுப்பு நாடுகள் வழங்கியுள்ளன.
இதன் முன்னேற்றங்கள் குறித்து முழுமையான அறிவிப்பை வெளிவிவகார செயலாளர் ஹரிணி விஜயவர்த்தன நாட்டுக்கு வழங்குவார் என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பில் சீனாவுடனான இந்தியாவின் ஈடுபாடு இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது.
இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக உள்ளன.
தெற்காசியாவை அணுகும் அமெரிக்காவின் முக்கிய பங்காளியாக டில்லி இப்போது உள்ளது.
மறுபுறம் பிரிக்ஸ் உறுப்பினராக இந்தியா உள்ளதுடன், சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை பேணுகிறது.
உலகளாவிய கிழக்கில் நிகழ்ந்து வரும் பொருளாதார மாற்றத்தை இந்தியா அவதானித்து, அதைச் சாதகமாக்க முயல்கிறது.
இந்த நிலைப்பாடு இலங்கைக்கும் பயனளிப்பதாக அமையும் என்பது பொருளாதார நிபுணர்களின் எதிர்வுக் கூறலாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸ நாயக்க, பிரிக்ஸ் உறுப்புரிமையில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதேவேளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பிரிக்ஸ் நாடுகளின் ஆதரவை கோரியுள்ளார்.
ஆனால், பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இந்த முடிவு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மாத்திரம் எடுக்கப்படவில்லை.
முந்தைய அமைச்சரவை இந்த முடிவை அங்கீகரித்திருந்தது.
அனைத்து இராஜதந்திர தளங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்த பின்னர்,
இந்தியாவின் உத்தியோகபூர்வ ஒப்புதலுடன் இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் இணை யும்போது, எந்தவொரு மோதலையும் வளர்க்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என்பதை மேற்கு நாடுகளுக்கு உணர்த்துகிறது.
மேலும் இலங்கையின் நீண்டகால அணி சேராக் கொள்கையினை உறுதியாக நிலைநிறுத்தவும் முடிகிறது.
எவ்வாறாயினும் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் சமீபத்தில் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ளன.
இலங்கை, இந்தோனேசியா மற்றும் ஆர்ஜென்ரீனா உட்பட 30இற்கும் மேற்பட்ட நாடுகள் இந்த அமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பி டத்தக்கது.