அறுகம்குடாவில் சுற்றுலாவினர் சுற்றுலா வீஸாவில் வியாபாரம், மத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களா பொலிஸார் விசாரணை

2 months ago



அறுகம்குடா பகுதியில் உள்ள இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் சுற்றுலா வீஸாவில் இருக்கும் போது வியாபாரம் அல்லது மதம் சார்பான நடவடிக் கைகள் எதிலும் ஈடுபடுகின்றார்களா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் கூறினார்.

சுற்றுலா வீஸாவில் சுற்றுலாப் பயணிகள் வியாபாரம், மதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கடந்த காலங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, அறுகம்குடா பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளும், குறிப்பாக இஸ்ரேலியர்கள், சுற்றுலா வீஸாவில் உள்ளனர்.

விடுமுறையில் சுற்றுலா பயணிகள் ஏதேனும் வியாபாரம், மதம் அல்லது வேறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அது குறித்து முறைப்பாடு அளிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.


அண்மைய பதிவுகள்