யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான ரயில் சேவை ஆரம்பமாவது மீண்டும் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் கொழும்பு ரயில் சேவை கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டது.
மஹவ -அநுராதபுரம் இடையிலான ரயில் பாதை புனரமைப்புப் பணிக்காகவே இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
ரயில் பாதை புனரமைப்பு பணிகள் செப்ரெம்பரிலேயே நிறைவடைந்துவிட்ட நிலையில் சமிக்ஞை அமைப்பு முறையில் ஏற்பட்ட குழப்பங்களால் ரயில் சேவையை ஆரம்பிக்கும் பணி தொடர்ந்து தாமதமாகி வந்தது.
ரயில் சேவையை மீண்டும் ஆரம்பமாவதாக முன்னரும் பல தடவைகள் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.