யாழ்.நெடுந்தீவில் இருந்து நாளை காலை சமுத்தரதேவா படகு சேவை இடம்பெறும்
நெடுந்தீவில் இருந்து சமுத்தரதேவா படகு நாளை (நவம்பர் 29) காலை 6.45 இற்கு சேவையினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பல நோ. கூ. சங்கப் படகான சமுத்திரதேவா படகு நாளையதினம் வழமையான வாரநாட்களுக்குரிய சேவையினை வழங்கவுள்ளதாக நெடுந்தீவு பல நோ. கூ. சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 04 நாட்களாக நெடுந்தீவுக்கான படகு சேவை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.