கோவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை

3 weeks ago



கோவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தை மேற்கொண்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என      அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

கொரோனா காலத்தில்                  முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை என்னவென அவர் வினவினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, கடந்த            அரசாங்கத்தினால்      மேற்கொள்ளப்பட்ட குரூரமான தீர்மானம் அதுவென சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்கப்  படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

அவர் தெரிவிக்கையில்-

கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்தமை தொடர்பிலான எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த அரசாங்கத்தின் அந்த செயற்பாட்டினை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அரசியல் தேவைக்காக விஞ்ஞான ரீதியாக ஆராயாமல் அவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு காரணமாக நபர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி  உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம் - என்றார். 

அண்மைய பதிவுகள்