தமிழகத்தில் 31 நாட்களில் 133 படுகொலைகள் இடம்பெற்றன. செல்வாக்கு பெற்ற மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல் லையென்றால், சாதாரண மக்க ளுக்கு என்ன பாதுகாப்பு இருக் கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது சீமான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
தமிழ்நாட்டில் 31 நாட்களில் 133 படுகொலைகள் இடம்பெற்றன. ஆம்ஸ்ட்ராங் முன் வைத்த தத்துவம் மரணித்து போகாது. சரண் அடைந்தவர்களை விசாரித்து ஏன் எதற்காக கொலை செய்தார்கள் எனக் கண்டறிந் தார்களா? குற்றவாளிகள் சரண டைந்தார்களா? கைது செய்யப் பட்டார்களா. அந்த உண்மையை முதலில் கூறுங்கள்.
வீட்டு வாசலில் வந்து ஒரு தலைவரை வெட்டிக் கொன்று விடலாம் என்ற துணிவு வருகிறது என்றால் அது எப்படி? என சீமான் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.