கனடாவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 59 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமார் 300 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் முதல் இந்த வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 363 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 14 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த களவாடப்பட்ட வாகனங்கள் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களவாடப்படும் வாகனங்கள் உடனடியாக உதிரிப் பாகங்களாக பிரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.