“பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட் டுப்பாட்டாளர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்களாக கருதப்படுவர்”, என்று குறிப்பிட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பியமையைத் தொடர்ந்து ரயில் துறையினரின் போராட்டம் நேற்றிரவு நிறைவுக்கு வந்தது.
சம்பள உயர்வு கோரிக்கையை முன் வைத்து ரயில் நிலைய அதிபர்கள், நேரக் கட்டுப்பாட்டாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனால், அரசாங்கத்துக்கு சுமார் 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், "பணிப்புறக்கணிப் பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதி பர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்களாக் கருதப்படுவர்” என்று குறிப்பிட்டு ஆயிரம் பேருக்குக் கடிதம் அனுப்பப்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புகையிரத கட்டுப் பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள் சங்கத்தின் அதிகாரிகள் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர் கள் தொழில்சங்கங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டது.
இதற்கமைய, நேற்றைய தினத் துக்குள் அதாவது நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமுகமளிக்கும் உத்தி யோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என்று அமைச்சர் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் உடன் முடிவுக்கு வருவ தாக நேற்றிரவு ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் அறிவித்தார். இதையடுத்து ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின.