2025 நவம்பரில் 22,685 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு
4 months ago

இவ்வருடத்தின் நவம்பர் மாதத்தில் 22,685 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரையான காலப் பகுதிக்குள் 291,267 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
அவர்களில் 172,746 ஆண்களும் 118,521 பெண்களும் அடங்குகின்றனர்.
அதிகளவானோர் குவைத் நாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 71,210 ஆகும்.
இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 48 083 பேரும், சவுதி அரேபியாவிற்கு 45,008 பேரும், கத்தாருக்கு 43,104 பேரும், இஸ்ரேலுக்கு 9,146 பேரும், ஜப்பானுக்கு 7,983 தென் கொரியாவுக்கு 6,925 பேரும், வேலை வாய்ப்புக்காகச் சென்றுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
