முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது.

3 months ago


முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது.

பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சப் கட்சி தலைவரான இம்ரான்கான் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குறிப்பாக, பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலை வர்கள் மற்றும் பிரமுகர்களிட மிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்குகளில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்ரான்கானை விடுதலை செய் யக்கோரி அவரது கட்சி ஆதர வாளர்கள் பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிறையில் உள்ள இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சப் கட்சியினர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

அண்மைய பதிவுகள்