இந்திய - இலங்கை கடற்படையினர் ஒன்றிணைந்து அரேபிய கடலில் படகிலிருந்து 500 kg கிரிஸ்டல் மெத் போதைப் பொருள் மீட்பு

1 month ago



இந்திய - இலங்கை கடற்படையினரின் ஒருங்கிணைந்த  நடவடிக்கையின் மூலமாக அரேபிய கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகளிலிருந்து சுமார் 500 கிலோ கிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கையானது நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் கொடியேற்றப்பட்ட மீன்பிடிக் கப்பல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்ப டையினர் இந்திய கடற்படைக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக இந்த மீட்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

உளவுத்துறை தகவலுக்கு அமைய விரைந்து செயல்பட்ட இந்திய கடற்படையினர் படகுகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் தகவல் இணைவு மையம் மற்றும் இந்திய கடற்படையின் வான்வழி பணிகள் மூலமான விரிவான கண்காணிப்பு ஆகியவற்றின் உதவியுடன் இந்த நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த முயற்சிகளின்போது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மீன்பிடிப் படகுகள் அடையாளம் காணப்பட்டன.

அவற்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டதுடன், கடத்தல் நடவக்கையை முன்னெடுத்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம், ஒப்படைக்கப்பட்டதாக இந்திய கடற்படை கூறியுள்ளது.