யாழ்.மாவட்டத்தில் 826 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் தெரிவிப்பு

3 weeks ago



யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் பன்முகப்படுத்தபட்ட வரவு - செலவுத்திட்டத்தின் கீழ் 826 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்துக்கான ஒதுக்கீட்டாக 322 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்காக 829 திட்டங்கள் அட்டவணையிடப்பட்டிருந்தன. 

இதன் பிரகாரம் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும் முடிவுறுத்தப்பட்ட திட்டங்களின் பெளதீக வீதம் 99.6 சதவிகிதமாகவும் இதுவரையான செலவீனம் 302.82 மில்லியனாகவும், செலவீன வீதம் 94.1 சத விகிதமாகவும் காணப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு என நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விசேட நிதி சில பிரதேச செயலகங்களில் நிறைவுறுத்தப்படாத காரணத்தால் நடைபெற்ற தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த மாதம் மீளப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது . 

அண்மைய பதிவுகள்