நாட்டில் இராணுவமயமாக்கலை சட்ட பூர்வமாக முன்னெடுக்கவே யுக்திய நடவடிக்கை- சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இராணுவமயமாக்கலை சட்ட பூர்வமாக முன்னெடுக்கவே யுக்திய நடவடிக்கை ஒரு திட்டமாக கையாளப்படுகிறது.
'யுக்திய' நடவடிக்கை மற்றும் அதன்போது பின்பற் றப்படும் உத்திகளின் பின்னணியிலுள்ள உண்மையான நோக்கம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
இவ்வாறு இலங்கை மனித உரி மைகள் ஆணைக்குழுவின் முன் னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக சட்டம் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் இரா ணுவ மயமாக்கலை சட்டபூர்வமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் போதைப்பொரு ளுக்கு எதிரான 'யுக்திய' நடவடிக் கையும் இராணுவமயமாக்கலுக்கு வாய்ப்பளிப்பதற்கும், அதனை நியாயப்படுத்துவதற்குமான ஒரு திட்டமாகவே அமைகிறது.
'யுக்திய' நடவடிக்கை மற்றும் அதன்போது பின்பற்றப்படும் உத் திகளின் பின்னணியிலுள்ள உண்மையான நோக்கம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன. அது சட்டவாட்சியையும், உரிமைகளின் பாதுகாப்பையும் முற்றிலும் சீர்குலைப்பதாக அமையும் என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
