அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம் ஒன்று இன்று (28) இடம்பெற்றது.
பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையம் முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக விசாரணைகள் ஏதும் இன்றி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியே இப் பாேராட்டம் இடம்பெற்றது.
இதில் இந்து, கத்தாேலிக்க, இஸ்லாம் மதத்தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாெது மக்கள் எனப் பலரும் கலந்து காெண்டு கையெழுத்திட்டனர்.