

சீனாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய ஏரியின் அணை திடீரென உடைந்தது. இதனால் 5,700 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட னர்.
சீனாவின் ஹூனான் மாகா ணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அங்குள்ள மிலோ ஆற்றில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் உயர்ந் துள்ளது. இதனால் ஆற்றங் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவின் 2 ஆவது மிகப்பெரிய நன்னீர் ஏரியான டாங்டிங் ஏரியின் குறுக்கே கட்டப் பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 5,700 பேர் வெளியேற்றப்பட்டு பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2,300 இற்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். அதேசமயம் சீனாவின் மற்றொரு மிகப்பெரிய ஏரியான போயாங் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
