சீக்கியரை கொலை செய்ய முயற்சித்தார் என இந்தியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு

2 months ago


 

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்த சீக்கியர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தார் என இந்தியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

நியுயோர்க்கின் தென்மாவட்டத்திற்கான அமெரிக்க சட்டத்தரணிகள் அலுவலகம் குர்பத்வந்த சிங்கினை கொல்ல முயன்றார் என விகாஸ் யாதவ்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

வாடகைக்கு கொலை செய்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியுள்ளார்.

விகாஸ்யாதவிற்கு எதிராக முதல்முறைiயாக சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு சீக்கிய பிரிவினைவாதியை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டுகளுடன் இந்திய அரசாங்கத்தை நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்