திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர்.
திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர்.
பணமில்லாத ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது.
தினமும் அன்னதானம் வழங்கும் ஷீலாம்மா என்ற பெயரில் இந்த பதிவை சிங்கள இளைஞன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
“பதவியில் இருந்து திருகோணமலை செல்லும் போது இக்பால் நகர் என்ற இடத்திலேயே இந்த மனிதாபிமானமிக்க பெண்ணை சந்தித்தேன்.
வீதிக்கு அருகிலுள்ள சிறிய குடிசை ஒன்றில், மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்தது.
தமிழர்களின் சுவையில் வழங்கப்பட்ட உணவை விடவும் அங்கிருந்த பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்த விடயமே மனதை நிறைவாக்கியது.
பணம் இல்லாத அனைவருக்காகவும் ஷீலாம்மாவிடம் தினமும் உணவு உள்ளது. பணத்தில் ஏழையாக இருந்தாலும் இதயத்தில் பணக்காரராக எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களின் வாழ்க்கை இது” என சிங்கள இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.