ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு, பாரபட்சத்தை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் போராட்டம் .ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

ஆசிரியர்களின் இடமாற்றங்களின் போது அரசியல் தலையீடுகள், பாரபட்சம் உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தில் குதிப்போம் என்று இலங்கைத் தாய்மொழி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிறிகந்தனேசன் புயல்நேசன் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் ஆண்டுதோறும் இடமாற்றம் நடைபெறுகின்றது. இவ்வாறு நடைபெற்றாலும் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களிலே பணிசெய்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் ஐந்து வெளிமாவட்டச் சேவையை நிறைவு செய்த ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர்.
இருப்பினும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் நியமனம்பெற்ற ஆசிரியர்கள், வெளி மாவட்டச் சேவையை 8 அல்லது 10 வருடங்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இதனால் அவர்கள் உளநெருக்கடிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளார்கள். இடமாற்றச் சபையிலே தீர்மானம் எடுக்கப்படுகின்ற போது தேசிய இடமாற்றக் கொள்கையை அடிப்படையாக வைத்து அதற்கேற்ப இந்த இடமாற்றம் வழங்கப்படுவதில்லை.
'வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களிலும் அரசியல் சார்பான நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இடமாற்றத்திலேயே அரசியல் சார்பாக தொழிற்சங்கங்கள் செயற்பட்டுக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்தினார்கள்.
தற்போதைய அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல.
எனவே இதற்கு 14 நாள்களுக்குள் முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடின் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுப்பதோடு, யாழ்ப்பாணநகரில் வீதி ஊர்வலத்தையும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
