ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மீண்டும் வடக்கு காசாவுக்கு சென்றுள்ளனர்

2 months ago



ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மீண்டும் வடக்கு காசாவுக்கு சென்றுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் காரணமாக இடம்பெயர்ந்திருந்த பலர் தற்போது வடக்கு காசா நோக்கி செல்கின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து வடக்கு காசாவில் மீண்டும் குடியேறுவதற்கு பலரும் எதிர்பார்த்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் இடம்பெற்று வந்த போரினால் மக்களின் வாழ்விடங்கள், குடியிருப்புகள், உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மைய பதிவுகள்