மன்னார் நகர சதொச மனித புதைகுழி அகழ்வுப் பணி மூடி மறைக்கப்படுகிறது.

2 months ago



மன்னார் நகர மையப் பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதொச மனித புதைகுழி அகழ்வுப் பணியானது மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நிலையில் முதற்கட்டமாக தடயப் பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழவுள்ள பகுதியை ஸ்கான் மற்றும் அகழ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக மன்னார் சதொச வளாகத்துக்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பல நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வுப் பணிகள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இருப்பினும் குறித்த அகழ்வுப் பணி, ஸ்கான் செயல்பாடுகளை படமோ, காணொலியோ பதிவு செய்ய மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சதொச மனித புதைகுழி அகழ்வுப் பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வுப் பணி தொடர்பான உண்மையான விடயங்களை அறிக்கையிடவும் அகழ்வுச் செயற்பாடுகளை  ஆவணப்படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அகழ்வுப் பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயல்பாடுகளை காணொளியோ, படமோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த அகழ்வுப் பணி தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயல்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்கவும் மறுத்து வருகின்றனர். 

அண்மைய பதிவுகள்