இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பு

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த நவம்பர் மாதம் மொத்தமாக 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
இந்த தொகை கடந்த ஒக்ரோபர் மாதம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது.
அதற்கு அமைவாக 2024 ஒக்ரோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது நவம்பர் மாதம் புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பலானது நவம்பர் மாதம் சரிவினை கண்டுள்ளது.
மேலும், 2023 நவம்பரில் பதிவு செய்யப்பட்ட 537.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஒரு சிறிய வீழ்ச்சியையும் எடுத்துக் காட்டுகிறது.
இதேவேளை, 206,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த ஏல விற்பனை எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 76,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
