மன்னாரில் மனித புதைகுழி அகழவுள்ளதால் தடயப் பொருட்களை பிரித்தெடுக்கும், புதைகுழி பகுதி ஸ்கேன் செய்யும் பணிகள் இடம்பெறுகிறது

3 months ago


மன்னாரில் மனித புதைகுழி அகழவுள்ளதால் தடயப் பொருட்களை பிரித்தெடுக்கும், புதைகுழி பகுதி ஸ்கேன் செய்யும் பணிகள் இடம்பெறுகிறது

மன்னார் நகர மையப் பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதோச மனித புதைகுழி அகழ்வுப் பணியானது மீண்டும் இவ்வாரம்                          இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் முதற்கட்டமாக தடயப் பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக மன்னார் சதோச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வுப் பணிகள் நேற்று (08) முதல் இடம்பெற்று வருகின்றது.

இருப்பினும் குறித்த அகழ்வுப் பணி தொடர்பான செயற்பாடுகளையோ,ஸ்கான் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்க, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே சதோச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வுப் பணி தொடர்பான உண்மையான விடையங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

என்ற போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வுப் பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளையோ கணொளியோ புகைப்படமே எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.