கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

5 months ago


கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். முற்றவெளி மைதானம் முன்பாக இன்று(23.07.2024) மாலை நடைபெற்றுள்ளது.

இதன்போது, நினைவேந்தல் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனையவர்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்துடன், ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெலிக்கடை சிறைசாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளும் நாடு முழுவதும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களும் நினைவு கூறப்பட்டுள்ளனர்.

மேலும், 1948 முதல் இன்றுவரை நடைபெற்ற நடைபெறுகின்ற இனஅழிப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கட்சியின் மாவட்டப் பணிமனையான அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியுள்ளனர்.

ட்சியின் செயல்நிலை உறுப்பினர்கள் பலரது பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நினைவேந்தலின்போது, அண்மையில் மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனுக்கும், தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவரும் ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவருமான தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கும் (பனாகொட மகேஸ்வரன்) அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



அண்மைய பதிவுகள்