இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன், அ. பத்திநாதன், செ. டினேசன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்

3 months ago


நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மன்னார் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன்,                        அ. பத்திநாதன், செ. டினேசன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்று அறிய வருகின்றது.

நேற்றைய தினம் மன்னார் மாவட் டத்துக்கு சென்ற தமிழ் அரசுக் கட்சியின் தெரிவுக் குழு உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் இவர்கள் மூவரின் தெரிவையும் உறுதிப்படுத்தினார் என்றும் அறிய முடிகின்றது.

தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சுமந்திரனின் அழைப்பை ஏற்று அவர் மீண்டும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இவர் தவிர, முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலர் அந்தோனிப்பிள்ளை பத்திநாதன், இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோரும் மன்னார் தொகுதி சார்ந்து போட்டியிடுவர் என்று கூறப்படுகின்றது.

எனினும், இவர்களின் தெரிவை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுவே உறுதிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்