யாழ் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் நோக்கில் தமிழியல் நூலகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று(29) காலை 09.மணிக்கு மங்களகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
தமிழியல் நூலகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் பேராசியருமான கலாநிதி எஸ்.ரகுராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சற்குணராஜா கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தில் 5000 இற்கு மேற்பட்ட கைநூல்கள் மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் சிந்தனை நூல்கள், இதிகாசம்,புராண நாவல்கள், சிறுகதை நூல்கள், கதைப்புத்தக நூல்கள்,பல்கலைக் கழக மாணவர்களின் தொகுக்கப்பட்ட ஆக்ககட்டுரைகள்,அறிக்கைகள், மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கான புத்தகங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பதிவாளர்கள்,மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்