தீவகத்தில் சமூக விரோத கும்பலால் கலப்பின வளர்ப்பு மாடுகள் கூட களவாடி இறைச்சிக்காக வெட்டப்படுவதாக மக்கள் கவலை

1 week ago



தீவகம் வேலணைப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்ற கும்பல்களால் மக்களுக்கு வாழ்வாதாரமாக வழங்கப்பட்ட கலப்பின வளர்ப்பு மாடுகள் கூட களவாடி இறைச்சிக்காக வெட்டப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு களவாடப்படும் மாடுகளின் இறைச்சியில் பெரும்பகுதி யாழ்ப்பாணம் கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாடுகளின் இறைச்சிகளை எடுத்துவிட்டு மிகுதியை குடிநீர் கிணறுகள், விவசாய கிணறுகளுக்குள்ளும் நீர் நிலைகளிலும் வீசி விட்டு செல்கின்றனர்.

இவ்வாறான செயல்களால் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படும் பெரிய கலப்பின வாழ்வாதாரப் பசுக்களை இழந்து மக்கள் தவிப்பதோடு இதன்போது மனிதாபிமானம் இன்றி கர்ப்பம் தரித்த பசுக்கள் கூட இக் கயவர்களால் கடத்தப்பட்டு இறைச்சியாக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

தொடரும் இக் களவுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கவலை தெரிவிக்கும் மக்கள் முன்னர் மண்டைதீவில் பொலிஸ் காவலரண் காணப்பட்ட நிலையில் குறைந்தளவில் இருந்த இறைச்சி கடத்தல்கள் குறித்த காவலரண் அகற்றப்பட்ட நிலையில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்