காணி, பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் வழங்கப்போவதில்லை மீண்டும் கூறுகிறார் நாமல் ராஜபக்ஷ.
13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
13ஆவது திருத்தத்தை இனவாதம் என்று சிலர் கூற முயற் சிப்பதாகவும். ஆனால் அது அவ் வாறு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அளுத்கம பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாமல் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
இலங்கையை உலகளாவிய போக்குவரத்து மையமாக மாற் றுதல், உலகளாவிய போக்குவ ரத்துத்துறையில் சேவை செய்யும் இடம். இரத்தினக்கல் தொழில்துறைக்கு எளிமையான வரிக் கொள்கை மற்றும் எளி மையான முறைகளை அறிமுகப் படுத்துவதன் மூலம், இலங்கை இரத்தினக்கல் தொழிலில் உலகின் மையமாக மாற்றப்படும்.
பொதுச் சேவையை எளிதாக்க வேண்டுமானால், பொதுச் சேவை அரசு இயந்திரங்கள் டிஜிற்றல் அரசு நிர்வாகமாக மாற்றப்பட வேண்டும்.
இளைஞர் சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராக, அரசு சேவையை டிஜிற்றல் மயமாக மாற்றுவதுடன், பொது சேவையை மக்களுக்கு எளிதாக்கும் திட்டம் தயாரிக்கப்படும்.
13ஆவது திருத்தச் சட்டத்தில் காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கமாட்டேன். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இனவாதம் அல்ல. -என்றார்.