கனடாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைப்பதாகக் கூறும் ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மை -- பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை

கனடாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைப்பதாகக் கூறும் ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மையானது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடாவை இணைப்பதற்கு ட்ரம்ப் காட்டும் ஆர்வத்திற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்திவரும் விடயம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மையானதுதான்.
பழங்காலத்தில் வலிமையான மன்னர்கள் மற்ற நாடுகளைப் பிடிக்கும் ஆசையுடன் போருக்குப் புறப்பட்டதுபோல, அல்லது கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தானியா பல நாடுகளை தனக்கு அடிமைப்படுத்தினது போல, ட்ரம்புக்கும் நாடு பிடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளதுபோல் தெரிகிறது.
சமீபத்தில், உக்ரைன் நாட்டிலுள்ள அரிய வகை தாதுக்கள் மற்றும் கனிம வளங்கள் ட்ரம்ப் கண்வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதேபோல, கனடாவின் அரிய வகை தாதுக்கள் மீதும் ட்ரம்ப் கண் வைத்துள்ளார்.
ஆக, கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துவிட்டால் தனது ஆசையை நிறைவேற்றுவது ட்ரம்புக்கு எளிதாகிவிடும்.
எனவே, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாக ட்ரம்ப் சாதாரணமாக கூறவில்லை.
உண்மையாகவே அவர் கனடாவின் அரிய வகை தாதுக்களுக்காக கனடா மீது கண்வைத்துள்ளார்.
இதற்காகத்தான் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாக அவர் மிரட்டிவருகிறார்." - என்றார்
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
