
யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (09) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதன்போது நான்காம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையே மூண்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த மாணவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக உள்ளக மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
