கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.
இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர் களை மொட்டையடித்து அனுப்பிய தால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 27 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
சிறை தண்டனைக்குப் பின்னர் இவர்களின் வழக்கு கடந்த 5 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜா, சசிக்குமார், மாரி கிங்ஸ்டன், மெக்கான்ஷ் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்ததுடன், தலா 50 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்த வும் உத்தரவிட்டார்.
மேலும் கணேசன. சேசு. அடைக்க லம் ஆகிய 3 மீனவர்கள் இரண்டாவது முறையாக எல்லைதாண்டி வந்தனர் என கூறி ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், அவர்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து 3 மீனவர்களின் உறவினர்கள் கடன் வாங்கி 7 ஆம் திகதி பணத்தை செலுத்தியுள்ளனர்.
ஆனால் 6 ஆம் திகதி அபராதத் தொகையை செலுத்தவில்லை என அவர்களை கைவிலங்கிட்டு மொட்டை அடித்தும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து, வளாகத்திலுள்ள கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தினர் என சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மீனவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு வந்ததை கண்ட அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து இலங்கை அர சாங்கத்தின் தொடர் அத்துமீறல் மற்றும் மனித நேயமற்ற செயலை கண்டித்தும், மத்திய அரசு மீனவர்கள் பிரச்சனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், இராமேஸ்வரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சி மடம் பஸ் நிறுத்தம் அருகே மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மீனவனர். விடுவிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
மீனவர் சங்க தலைவர் எமரிட் கூறும்போது, “மொட்டை அடிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள் தான் என எண்ண வேண்டாம்.
எங்களுடைய வரிப் பணத்தில் வாழும் இலங்கை அரசு எங்கள் மீனவர்களை மொட்டை அடித்து மனித நேயமற்ற அரக்கர்களாக கொடுமைப்படுத்தி உள்ளனர்.
மத்திய அரசு இதையும் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. இது இந்தியாவை அவமானப்படுத்தியதாகத் தான் நாங்கள் கருதுகிறோம்.
ஆகவே, இதுவரை இலங்கை கடற் படை எங்களை அடித்து கொடுமைப் படுத்தியது, படகுகளை சிறை பிடித்தது. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இனிமேலும் இவ்வாறான மனிதநேயமற்ற செயலை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
ஆகவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கும் எதிராகவும் நடத்துவோம்" என்றார்.