
ஒரே இரவில் 37 உக்ரைனின் டிரோன்களை அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷியாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வரும் நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று இரவு ரஷியா கூட்டமைப்பின் எல்லையில் உள்ள இலக்குகள் மீது டிரோன்களை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை நடத்த உக்ரைன் முயன்றபோது, ரஷிய ராணுவம் அதை இடைமறித்து அழித்தன.
அதில் 12 டிரோன்கள் குர்ஸ்க் பிராந்தியத்தின் மீதும், 12 கிராஸ்னோடர் பிரதேசத்தின் மீதும், ஏழு பிரையன்ஸ்க் பிராந்தியத்தின் மீதும், ஐந்து ஓரியோல் பிராந்தியத்தின் மீதும் மற்றும் ஒன்றூ அசோவ் கடல் மீதும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
