மாகாண சபைகளுக்கு வழங்காத அதிகாரத்தை வழங்க முயற்சி எடுத்தால் அதனை தடுப்போம்."- விமல் வீரவன்ஸ விடாப்பிடி

1 month ago



பொலிஸ் அதிகாரம், நிதியம் அமைக்கும் அதிகாரம் உட்பட மாகாண சபைகளுக்கு இதுவரை வழங்கப்படாத அதிகாரங்களை வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அதனை  தடுப்பதற்கு முன்னின்று            செயற்படுவோம்."- என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு-

நாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஒதுங்கவும் இல்லை. பொதுத் தேர்தலில் மட்டுமே    போட்டியிடவில்லை. இனி எங்கள் பயணம் தனி வழி அரசியல் பயணம் தான்.

எந்தவொரு நபரையும் அரியணையேற்றுவதற்காக தோள் கொடுத்து செயற்படமாட்டோம்.

அமையும் கூட்டணிகள் கூட எமது கட்சி தலைமையிலேயே அமையும்.

மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வழியில் இந்த அரசாங்கம் பயணித்தால் அதனை வரவேற்போம். வாழ்த்துவோம்.

இதைவிடுத்து மாவீரர் வாரத்துக்கு இடமளித்து, தமிழ் டயஸ் போராக்களின் தேவைக்கேற்ப செயற்பட்டால், மாகாண சபைகளுக்கு பொலிஸ் உள்ளிட்ட அதிகாரங்களை வழங்க முற்பட்டால் இதனை தடுப்பதற்கு நாம் முன்னின்று செயற்படுவோம்.

அதேபோல அமெரிக்க, இந்திய நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படவும் இடமளிக்கமாட்டோம்- என்றார்.