கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டைக் கொண்டு வந்த இளைஞன் ஒருவர் கைது.

5 months ago


சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் விமான நிலைய வளாகத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று காலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் டுபாயில் இருந்து வந்துள்ளதுடன், இலங்கைக்கு வரியின்றி கொண்டு வரப்பட்ட 28,400 சிகரெட்டுகள் மற்றும் 142 அட்டைப்பெட்டிகள் அவரது பயணப் பொதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

22 வயதான இந்த சந்தேக நபர் கலபுலுலந்த பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்