காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 250 நாள்களைக் கடந்துள்ள நிலையில், சுமார் 15 ஆயிரத்து 694 சிறுவர்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 17 ஆயிரம் சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5வயதிற்குட்பட்ட 8ஆயிரம் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது