
திருகோணமலை, கடலில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிக் காணாமல்போன 20 வயதான இளைஞர் இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை திருகோணமலை கடற்கரையில் நண்பர்களான 4 பேர் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினர்.
அவர்களில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அத்தோடு ஒருவர் காணாமல் போனதையடுத்து அவரைத் தேடும் பணி திருகோணமலை கடற்படையினர் மற்றும் துறைமுகப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து காப்பாற்றப்பட்ட இளைஞர்கள் மூவரும் விசாரணைக்காகத் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், காணாமல்போன இளைஞர் இன்று காலை சடலமாக மீட்கப்படுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
