தமிழரசு கட்சிக் கிளையை கனடாவில் அமைப்பதற்கு கட்சி யாப்பில் இடமில்லை.-- எம்.பி சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு

3 months ago




தமிழரசு கட்சிக்கான கிளையை கனடாவில் அமைப்பதற்கு கட்சி யாப்பில் இடமில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கனடாவின் ரொன்றோவில் இடம்பெற்ற தமிழ் மக்களுடனான சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வாங்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கை தமிழரசுக் கட்சி தனது அரசியல் அமைப்பு விதிகளின் பிரகாரம் இலங்கைக்குள் மாத்திரம் இயங்கலாம். வெளிநாடுகளில் இயங்க முடியாது.

அதுதொடர்பில் கட்சி யாப்பில் இதுவரை திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை.

ஏற்கனவே, திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் வெளிநாடுகளில் கிளைகள் அமைப்பதற்கான விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆனால், எமது கட்சியின் பொதுச்சபையில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

எனவே, கனடாவில் தமிழரசு கட்சியின் கிளையை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் வெகு விரைவில் உங்களுக்கு வழங்குவோம். நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.

ஆனால், தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் நீங்கள் ஒரு தொண்டு நிறுவனத்தை அமைக்கலாம்.

அதன் மூலம் நீங்கள் மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளலாம்.

அதற்கு நீங்கள் கட்சியின் அனுமதியை பெற்றுக்கொள்ள தேவையில்லை.

ஆனால், தமிழரசு கட்சி தொடர்பான நீதிமன்ற வழக்கு நிறைவடைந்த பின்னர், நாங்களாக தேடிவந்து உங்கள் தொண்டு நிறுவனத்தை கட்சி கிளையாக இணைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்."- என்றார்.

அண்மைய பதிவுகள்