வெளிநாட்டுப் பயணம் தற்போது இறுக்கமான சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும், இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டதாகவும் மாறியுள்ளது- யாழ்.மாவட்ட பதில் செயலர் ம.பிரதீபன் தெரிவிப்பு
வெளிநாட்டுப் பயணம் தற்போது இறுக்கமான சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும், இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டதாகவும் மாறியுள்ளமையால் அரச சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்டப் பதில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான தொழிலாளர் ஆட்சேர்ப்பு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சேவைகள் தொடர்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பைத் தேடுபவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் அண்மையில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம், பதிவு செய்யப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் தொழில் மற்றும் இலங்கை வேலைவாய்ப்பு அமைச்சின் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.