அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஜனாதிபதித் தேர்தல் குறித்து நேரடி மதிப்பீடுகளை முன்னெடுத்து வருகிறது. தேசிய இராஜதந்திர மையம் தெரிவிப்பு.

4 months ago


புவிசார் அரசியல் போட்டியில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தின் அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஜனாதிபதித் தேர்தல் குறித்து நேரடி மதிப்பீடுகளை முன்னெடுத்து வருவதாக கொழும்பை தளமாக கொண்ட தேசிய இராஜதந்திர மையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கிய நாடுகளின் தலையீடுகளும் கண்காணிப்புகளும் தீவிரமடைந் துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த காலங்களில் நடந்த முக்கிய தேர்தல்களைப் போலவே, நாட்டின் கீழ் மட்ட அரசியல் செல்வாக்கு மற்றும் நகர்வுகளை மதிப்பிடும் வகையில் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய நாடுகள் பல ஆர்வத்துடன் கொழும்பில் செயல்பட்டு வருகின்றன. அனைத்து பிரதான கட்சிகளுமே கடந்த மே தினத்தை எதிர்கால தேர்தலின் அரசியல்பலத்தை வெளிப்படுத்தும் வகையில் கூட்டங்களை நடத்தியிருந்தன.

இந்தக் கூட்டங்களின் பிரதி பலிப்புகள் முக்கிய நாடுகளின் ஆர் வத்தை தூண்டியுள்ளன. இலங்கை யுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருக்கும் சர்வதேச நாடுகள் இலங்கையின் அரசியல் முன்னேற் றங்களை அவதானிப்பது பொது வான விடயமாகும்.

குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பிரித்தானியா உட்பட பிற மேற்கத்திய நாடுகள் ஜனாதிபதி தேர்தலின் சாத்தியமான மக்கள் ஆதரவு குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத்துறையின் துணை அமைச்சர் சன் ஹையானின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது நேரடியாக மக்கள் மத்தியில் சென்று கருத்து கணிப்புகளை மேற் கொண்டிருந்தார். அது மாத்திர மன்றி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட அனைத்து பிரதான அரசியல் கட்சிகளுடனும் பேச்சுகளையும் முன்னெடுத்திருந் தார். ஜனாதிபதித் தேர்தலில் உண்மையான நிலைப்பாட்டை அறியும் சீனாவின் ஆர்வமே இதன் மூலம் வெளிப்படுகின்றது.

குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் மீதான ஈடுபாடு பொருளாதார முதலீடுகள் முதல் புவிசார் அரசியல் செல்வாக்கு வரை அந்தந்த நலன்களைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளின் வெளிப்பாடாகவே உள்ளது.

இலங்கை தேர்தல்களில் வெளி நாட்டு சக்திகளின் தலையீடுகள் எப்போதும் இருந்துள்ளன. ஆனால் அவற்றுக்கு எதிரான நேரடியான குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக மறைமுகமான சாடல்களும் இராஜ தந்திர ரீதியிலான அதிருப்திகளுமே வெளிப்படுத்தப்படுகின்றன.

இலங்கையை பொறுத்த வரையில் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதி பதித் தேர்தல் தேசிய அளவில் மாத்திரமன்றி பிராந்திய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே, இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் கடனை மீளப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் இலங்கையின் வளங்கள் ஊடாக பயனடைதல் போன்ற விடயங்களில் கூடுதல் அவதானம் செலுத்துகின்றன.

இலங்கையின் பிரதான கடன் வழங்குநரான சீனா தனது கடன் தொகையை மீளப் பெறக் கூடிய சாதகமான சூழல் நாட்டில் உருவாவதை விரும்பும் அதேவேளை, இந்தியாவும் இலங் கையில் தனது நலன்களின்மீது ஆர்வம் செலுத்தி இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்து வரு கின்றது.

குறிப்பாக இந்தியாவின் ஆசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் நில இணைப்புகளில் இலங் கையுடன் முனைப்புடன் செயல்படு கின்றது. இது சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் முன் முயற்சி திட் டத்துக்கு நிகரான இந்திய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்