நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும்.-- கப்பல் நிர்வாகம் அறிவிப்பு

2 months ago



இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால், நாகையில் இருந்து இலங்கை              காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை - இலங்கை இடையே  'சிவகங்கை' என்ற பயணிகள் கப்பல் சேவை கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதி தொடங்கியது.

அப்போது, இரு மார்க்கத்திலும் தினமும் கப்பல் இயக்கப்பட்டது.

இந்த நிலையில், பயணிகள்        முன்பதிவு குறைவாக இருந்ததால், செவ்வாய், வியாழன், ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களாக கப்பல் சேவை குறைக்கப்பட்டது.

பின்னர், சனிக்கிழமை உட்பட 4 நாட்களுக்கு கப்பல் சேவை நடைபெற்றது.