ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக வன்னி தேர்தலில் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் துளசி ஆகியோர் போட்டி
3 months ago
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் துளசி ஆகியோர் போட்டியிட உள்ளனர் என தெரிய வருகிறது.
இதேவேளை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க. சிவனேசன், கரை துறைபற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் க. விஜிந்தன், வர்த்தகரான அ.ரோஜர், முன்னாள் போராளியான கருணாநிதி ஜசோதினி ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.