வர்த்தக விசாவில் இலங்கைக்கு வருவோரின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆடைக் கைத்தொழில் அமைப்புகள் கோரிக்கை.
வர்த்தக விசாவில் இலங்கைக்கு வருகை தருவோர் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆடைக் கைத்தொழில் உற்பத்தியாளர்களின் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை விசா வழங்கப்படுகிறது.
ஆனால் வர்த்தக விசாவில் இலங்கைக்கு வருபவர்களுக்கு எதுவித திட்டமும் இல்லை.
வர்த்தக நோக்கத்துடன் வருவோர் சுற்றுலா விசாவில் வரமுடியாது.
கொள்வனவு நோக்கத்துடன் வருவோர், இயந்திரங்களை விற்பனை செய்வோர், உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப சேவைகளை வழங்குவோர் என பல்வேறு தரப்பினரும் வர்த்தக விசாவில் வருகை தருவார்கள்.
அவர்கள் தம்முடன் ஆவணங்கள், மாதிரிகளை எடுத்து வருவார்கள்.
குடிவரவு குடியகல்வுத் திணைக்கள இணையத்தளத்தில் காலம் கடந்த தரவுகளே காணப்படுகின்றன.
எனவே வர்த்தக விசாவில் வருவோர் எதிர்நோக்கும் சிக்கல்களை தீர்ப்பதற்கு சுற்றுலா அதிகார சபையும், சுற்றுலா ஊக்குவிப்பு செயலகமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஆடைக் கைத்தொழில் உற்பத்தி யாளர்களின் சங்கங்களின் இணைச் செயலாளர் யொஹான் லோறன்ஸ் தெரிவித்துள்ளார்.