புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கு ஜனாதிபதி செயற்படக் கூடாது- ஜயந்த சமரவீர வலியுறுத்து

1 month ago




"வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

எனவே, பிரிவினைவாதத்தைப் போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செயற்படக் கூடாது." - இவ்வாறு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர வலியுறுத்தினார்.

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது கொள்கைப் பிரகடனத்தில் இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அண்மைகாலமாக இவ்வாறு குறிப்பிடுவதை        அவதானிக்க முடிகின்றது.

தேசிய மக்கள் சக்திக்குக்        கிடைத்துள்ள ஆணை அமோகமானது.

வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.

பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்திச் செயற்பட்ட எம்.ஏ.சுமந்திரனையும் தோற்கடித்துள்ளார்கள்.

இருப்பினும் ஏனைய பிரிவினைவாதிகள்          நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

வடக்கு மக்கள் வழங்கியுள்ள இனவாத மற்ற ஆணையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்கவுக்கும், தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் உண்டு.

ஜனாதிபதிக்கு வாழ்த்துத்    தெரிவித்துள்ள கனடா வாழ் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளன.

பிரிவினைவாதத்தைப் போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செயற்படக் கூடாது.

வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு கொள்கை  அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றுள்ளோம்.

நிலைப்பாட்டில் உறுதியாக உள் இனங்களுக்கிடையில்      முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த பல்வேறு தரப்பினர் அரசுக்கு அழுத்தம்  பிரயோகிக்கின்றனர்.

நாட்டின் ஒருமைப்பாட்டைப்          பாதுகாத்த இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும். அரசுக்கும் உண்டு.

நாட்டின் ஒற்றையாட்சிக்கு       முன்னுரிமை வழங்கி அரசு செயற்பட வேண்டும்.

தேசியத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அரசு தீர்மானங்களை எடுத்தால் சமூகக் கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும்.

நாட்டின் நலன் கருதி அரசு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு            நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

புதிய யாப்பு வரைவின் உள்ளடக்கம் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். வெகு விரைவில் அவற்றையும் பகிரங்கப்படுத்துவோம்." - என்றார்.



அண்மைய பதிவுகள்