மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது.
7 months ago

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இவ் ஆண்டு இதுவரையான காலத்தில் 46 இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 341 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
