போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உயர்பதவிகளில் உள்ளனர்

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உயர் பதவிகளில் உள்ளனர் என்று தெரிவித்த அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் செனட்டட் டேவிட் சூபிரிட்ஜ் இன்றுவரை தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர், ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈவிரக்கமற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று 15 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் நிகழ்வு சிட்னியில் டவுன்கோலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் 100 இற்கும் மேற்பட்டோர் அதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இது தமிழ் ஈழத்துக்கும் இலங்கைக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி தருணங்களில் மே 2009 இல் இடம்பெற்றது.

சர்வதேச ரீதியில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயம் அல்ல போர் சூன்ய வலயம் தாக்கப்பட்டதுடன் ஆயிரக் கணக்கான தமிழர்கள் பலர் பொது மக்கள், பலர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பில் இருந்தவர்கள், இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

170,000 தமிழர்கள் அந்த ஈவிரக்கமற்ற போரில் இறுதிக் காலங்களில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் இன்றும் இலங்கை இராணுவத்திலும் அரசாங்கத்திலும் உயர் பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்கின்றனர்.

இன்றுவரை தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர், ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர்.

அண்மைய பதிவுகள்