அதிக வேகத்துடன் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண 30 வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன.
3 hours ago
அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண 91 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 30 வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 30 வேகமானிகளும் பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கான நிகழ்வு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரியவின் தலைமையில் நேற்று முற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.
அதன்படி, அதன் முதற்கட்டமாக நீர்கொழும்பு, களனி, கம்பஹா ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும், மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு பணிப்பாளருக்கும் அமெரிக்க தயாரிப்பிலான மேற்படி வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன.