இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனமும் (The Srilanka - Canada Business Council) யாழ்ப்பாண வணிகர் கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்.
பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் குறித்த ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.
இதன்போது யாழ்ப்பாண வணிகர் கழகம், யாழ்ப்பாண முகாமையாளர் நிறுவணம், யாழ்ப்பாண முகாமைத்துவ கழகம் மற்றும் திருகோணமலை வர்த்தக அமையம் ஆகிய நிறுவனங்கள் குறித்த புரிந்துனர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், The Srilanka - Canada Business Council தலைவர் பிரியந்த சந்திரசேக உள்ளிட்ட உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.