ரணிலின் வழிகாட்டலுடன் மாற்று நாடாளுமன்றத்தையும், நிழல் அமைச்சரவையையும் ஸ்தாபிக்க ஏற்பாடுகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் மாற்று நாடாளுமன்றத்தையும், நிழல்அமைச்சரவையையும் ஸ்தாபிப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த, தற்போதைய நாடாளுமன்றத்தில் இடம்பெறாத அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்களுக்கு, மாற்று நாடாளுமன்றத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
மாதமொன்றில் 8 நாள்கள் நாடாளுமன்ற அமர்வு நடைபெறும். எனவே, குறித்த நாட்களில் மாற்று நாடாளுமன்றத்தையும் கூட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நிழல் அமைச்சரவையும் ஸ்தாபிக்கப்பட்டு, விடயதானங்களும் ஒதுக்கப்படவுள்ளன.
சபாநாயகர், சபை முதல்வர் மற்றும் கோப், கோபா குழு உள்ளிட்டவற்றுக்கும் மாற்று உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
குறித்த மாற்று நாடாளுமன்றத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஜனாதிபதிகள் அழைக்கப்படவுள்ளனர் எனவும், கருத்துரைகளை ஆற்றுவதற்காக உலகத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது எனவும் தெரிய வருகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
