இலங்கை காலி முகத்திடலை கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்த, அமைச்சரவை அனுமதி

2 months ago




வைபவங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு காலி முகத்திடல் மைதானத்தை பயன்படுத்த, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

காலி முகத்திடல் மைதானத்தை நிர்வாக ரீதியாக மிகவும் முறைமை சார்ந்ததாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த                      ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோதே அமைச்சரவைப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

காலி முகத்திடல் மைதானத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் ஏறத்தாழ 03 மில்லியன் ரூபாய் வரை செலவு செய்யப்படுகின்றது.

குறித்த தொகையை ஈடு செய்வதற்காகவும், 2023ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்றவாறு, உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக நடமாடக் கூடியதும், மக்களுக்குச் சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கும் நோக்கில் வைபவங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வேறு கொண்டாட்டங்களுக்குப் பொருத்தமான நிர்ணயங்களுக்கு அமைய காலி முகத்திடல் மைதானத்தை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகளை வழங்குவது பொருத்தமானதெனக்                    கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க "தூய்மையானதும் பசுமையானதுமான காலி முகத்திடல்" எனும்                 எண்ணக்கருவுக்கு அமைய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்    சமர்ப்பித்த யோசனைக்கு      அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது-என்றார்.



அண்மைய பதிவுகள்