தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றைய தினம் (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பிரதான தபால் நிலையத்துக்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் 2700 நாளான இன்றைய தினம் இந்த போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும், "எங்கே எங்கே உறவுகள் எங்கே", "கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே" என்று கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.